‘வாட்ஸ் அப்’ பின் அடுத்த அதிரடி! இந்தியா முழுக்க அறிமுகமாகும் வாட்ஸ் அப் பே சேவை!

  சாரா   | Last Modified : 09 Feb, 2020 05:23 pm
whatsapp-pay-service-in-india

வாட்ஸ்அப் பே சேவையை இந்தியா முழுவதும்  வழங்குவதற்கு தேசிய பணப்பட்டுவாடா கழகம் அனுமதி அளித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வாட்ஸ்அப் பேமண்ட் சேவையை அந்நிறுவனம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முடியும். 

முன்னதாக கடந்த 2018ம் ஆண்டில் வாட்ஸ்அப் நிறுவனம் சுமார் பத்து லட்சம் பேருடன் வாட்ஸ்அப் பே சேவைக்கான சோதனையை துவங்கியது. எனினும் அரசு அனுமதி கிடைக்காததால் இந்த சேவையை வாட்ஸ்அப் இதுவரை வழங்காமல் இருந்து வந்தது. இந்நிலையில், தடைகள் நீங்கி சேவையை துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், வாட்ஸ்அப் பே சேவை முதற்கட்டமாக சுமார் ஒரு கோடி பேருக்கு வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது. இந்த சேவை யு.பி.ஐ. மூலம் மொபைலில் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள வழி செய்யும்.

இந்தியா முழுவதும் சுமார் 40 கோடி பேர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸ்அப் பே சேவை வழங்கப்படும் போது, நாட்டின் மிகப்பெரும் மொபைல் பேமண்ட் சேவைகளில் ஒன்றாக இது இருக்கும் என கூறப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close