ரஜினியின் அரசியல் ஆட்டம் ஸ்டார்ட்ஸ்! ஏப்.14ல் புது கட்சி! ஆகஸ்ட்டில் மாநாடு! செப்டம்பரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்!

  சாரா   | Last Modified : 09 Feb, 2020 07:51 pm
rajini-s-political-entry-starts

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்’ என்கிற ரஜினி பட பஞ்ச் வசனம் யாருக்கு பொருத்தமாக இருக்கிறதோ இல்லையோ ரஜினிக்கு நூறு சதவிகிதம் அப்படியே பொருந்துகிறது. தமிழகத்தில் ஏறத்தாழ 30 ஆண்டுகளாக தீவிர அரசியலில் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டு, ஒவ்வொரு பட ரிலீஸ் சமயத்திலும் ரசிகர்களுக்கு அரசியல் ஆசைக் காட்டிக் கொண்டிருந்த ரஜினிகாந்த், இப்போது முழு நேர அரசியலுக்கு ஆயத்தமாகிவிட்டார் என்கின்றன போயஸ் வட்டாரங்கள்.

தீவிர அரசியலில் இறங்கப்போவதாக ரஜினியே அறிவித்தாலும், ஒவ்வொரு முறையும் தொடர்ந்து ரஜினியின் படங்கள் தான் முன்பைவிட வேகமாக வெளியாகி கொண்டே இருக்கிறதே தவிர ரஜினி அரசியலுக்கு வந்ததாக தெரியவில்லை.

இந்நிலையில் ஏப்ரல் 14ம் தேதி ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்குவார் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடையே உற்சாகமான தகவல்கள் வலம் வந்துக் கொண்டிருக்கிறது.  

ஏப்ரல் 14ம் தேதி புது கட்சி, ஆகஸ்ட் மாதம் பிரம்மாண்டமான மாநாடு திருச்சியில் நடத்தி விட்டு, செப்டம்பர் மாதம் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க இருக்கிறார் ரஜினி என்று ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close