குழந்தை மேல சத்தியம் பண்ணுங்க! சீமானை வெளுக்கும் நடிகை விஜயலட்சுமி வீடியோ!

  சாரா   | Last Modified : 10 Feb, 2020 12:26 pm
actress-vijayalakshmi-about-seeman

தமிழ்நாட்டில் இருக்கிற பிரச்சனைகள் போதாதென்று, ‘எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்’ ரீதியில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி. கடந்த இரு தினங்களாக விஜயலட்சுமியின் வீடியோ தான் பரபர அரசியலையும் தாண்டி சமூக வலைத்தளங்களில் வலம் வந்துக் கொண்டிருக்கிறது.

 

சமீபத்தில் நடைப்பெற்ற தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு சென்று வந்திருந்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். 

இந்நிலையில் சீமான் தஞ்சை பெரிய கோவிலுக்குச் சென்று சிவனை வழிபட்டது குறித்து கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகை விஜயலட்சுமி. அந்த வீடியோவில் அவர் 'சீமான்... உங்களுக்கு அசிங்கமாவே இல்லையா? ஆரம்பக்கட்டத்தில் பெரியாரிய ஆதரவாளராக இருந்த சீமான் மேடை பேச்சுகளில் சிவனை மிகவும் ஏளனமாக பேசினார். வாழ்த்துகள் படத்தின் படப்பிடிப்பில் கூட சிவனை வழிப்பட்டு திருநீறு பூசியதற்காக 'காலையிலேயே பட்டையா' என்னை எல்லோர் முன்னிலையிலும் கிண்டலாக கேட்டு சிரிச்சீங்களே!  இன்னைக்கு அவர் சிவன் கோவிலில் சென்று வழிபாடு செய்கிறார். இவரை போன்ற பாவிகளை சிவன் சும்மா விடமாட்டார்' என பேசியுள்ளார்.

முன்னதாக, தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சீமான் ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி சீமான் மீது வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close