பாலியல் தொல்லை! வளர்ப்பு மகனை கூலிப்படை ஏவி கொலை செய்த தாய் கள்ளக்காதலனுடன் கைது!

  முத்து   | Last Modified : 10 Feb, 2020 12:31 pm
mother-arrested-for-murdering-son

தாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு மகனை கூலிப்படை ஏவி கொலை செய்த தாய் உட்பட நால்வர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அடுத்த திருநின்றவூர், வத்சலாபுரம், 3வது தெருவில் உள்ள பாழடைந்த வீட்டில் 2ஆம் தேதி காலை பட்டாக் கத்திகளால் வெட்டப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடலை மீட்டு விசாரணையை தொடங்கிய திருநின்றவூர் போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அந்த வாகனப்பதிவு எண் அடிப்படையில் விசாரித்தபோது ஆவடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கன்னிகாபுரத்தைச் சேர்ந்த 47 வயதான அஞ்சலி என்பவரது முகவரி கிடைத்தது. அவரிடம் விசாரணை செய்ததில் கொலை செய்யப்பட்டு கிடந்தது அவரது 19 வயது வளர்ப்பு மகன் சதீஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து, சதீஷின் பின்னணியை தெரிந்து கொண்ட போலீசார் அவருக்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் இருந்ததை அறிந்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் ஆவடி பகுதியைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி காமராஜ், 52 என்பவரை கைது செய்தனர்.

காமராஜை பிடித்து விசாரித்த போது அவருக்கும், கொலையான சதீஷின் வளர்ப்புத் தாயான அஞ்சலிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. மேலும், சதீஷ் கஞ்சா புகைத்துவிட்டு அஞ்சலியிடம் தவறாக நடக்க முயன்றதால், காமராஜ் மூலம் கூலிப்படையை ஏவி 3 லட்சம் பேரம் பேசி வளர்ப்பு மகனை கொலை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து இந்த கொலை வழக்கில், அஞ்சலி, காமராஜ், சுரேஷ், விக்னேஷ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள குமார் என்பவரை தேடி வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close