இந்தியா மீது பொருளாதார தாக்குதல்! பகீர் கிளப்பும் பாகிஸ்தான்! அதிர்ச்சி தகவலால் பரபரப்பு!

  முத்து   | Last Modified : 10 Feb, 2020 02:17 pm
pak-made-fake-rs-2-000-notes-with-face-value-of-rs-24-lakh-seized

பாகிஸ்தான் நாட்டில் அச்சிடப்பட்ட  சுமார் ரூ.24 லட்சம் மதிப்புடைய 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் மும்பையில் பறிமுதல் செய்யப்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு கள்ளநோட்டு கடத்தலை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிதீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. எனினும் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து அவ்வப்போது பயங்கரவாதிகளால் இந்தியாவுக்கு கள்ளநோட்டுகளை கடத்துவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில், மத்திய புலனாய்வு முகமை அளித்த தகவலின் பேரில், துபாயில் இருந்து விமானம் மூலம் வந்த ஜாவேத் ஷேக் என்ற பயணி பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது போலீசார் சோதனை நடத்தினர். 

அப்போது, அவர் எடுத்து வந்த பெட்டியில் கள்ள நோட்டுகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பாகிஸ்தானில் இருந்து துபாய் கொண்டுவந்து அங்கிருந்து இந்தியாவுக்கு கடத்தியதை ஜாவேத் ஒப்புக்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

பொதுமக்கள் கண்டறியாத வகையில் கள்ளநோட்டில் 7 பாதுகாப்பு அம்சங்கள் கச்சிதமாக இருந்ததாகவும், சூட்கேஸின் உள்பகுதியின் விளிம்புகளில் மறைத்து வைத்திருந்ததால் நோட்டுகளை விமான நிலைய சோதனையின் போது கண்டு பிடிக்க முடியவில்லை என்றும் போலீசார் விளக்கம் அளித்தனர். 

இந்தியா மீது பாகிஸ்தான் இப்படி பொருளாதார தாக்குதலை நிகழ்த்த வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து முயற்சித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மளிகை கடைகளில் பொட்டலம் மடிப்பதைப் போன்று, பாகிஸ்தானில் இந்திய ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த நிகழ்வு  மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close