ஸ்லிம்மாக நெனைச்ச சினிமா டான்ஸர்! உயிரைப் பறித்த ஆன்லைன் மாத்திரை!

  முத்து   | Last Modified : 10 Feb, 2020 02:14 pm
mumbai-dancer-dies-fake-weight-loss-pills

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் 22 வயதான சினிமா டான்ஸர் மேக்னா சுவாசப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். என்ன காரணமென விசாரித்தபோது, அவர் ஆன்லைனில் தடை செய்யப்பட்ட உடல் எடை குறைக்கும் மாத்திரையை வாங்கி உட்கொண்டுள்ளார். அந்த மாத்திரையின் பக்க விளைவால் அவருக்கு சுவாசப்பிரச்சினை ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

மேக்னாவின் இறப்பு பற்றி அவரது சகோதரர் கூறுகையில், மேக்னாவுக்கு இந்த மாத்திரை யார் மூலம் கிடைத்தது என்று எங்களுக்கு தெரியவில்லை, அவர் ஆன்லைனில் வாங்கினாரா அல்லது ஜிம் மூலம் வழங்கப்பட்டதா என போலீசார் விசாரிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் அளித்த புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close