ஒருதலை காதலால் விபரீதம்.. இளம்பெண்ணின் தந்தையை வெட்டிய இளைஞர்..

  முத்து   | Last Modified : 10 Feb, 2020 02:25 pm
youth-arrested-for-assaulting-woman-s-father

திருமணத்திற்கு பெண் தராததால் இளம்பெண்ணின் தந்தையை இளைஞர் கத்தியால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரின்  மகளை, அதே பகுதியைச் சேர்ந்த அஜய்குமார் (28) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இளைஞர் பல முறை காதலை கூறியும் அதனை அப்பெண் ஏற்கவில்லை.

இந்நிலையில் அஜய்குமார் நேற்று முன்தினம் சக்திவேல் வீட்டிற்கு சென்று அவரது மகளை திருமணம் செய்ய பெண் கேட்டுள்ளார். அதற்கு சக்திவேல் மறுப்பு தெரிவித்துயுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜய்குமார் தான் மறைத்து எடுத்து வைத்திருந்த சிறிய கத்தியால் சக்திவேலின் கையை வெட்டிவிட்டு தப்பியோடினார். அக்கம்பக்கத்தினர் காயமடைந்த சக்திவேலை மீட்டு  மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், தலைமறைவாக இருந்த அஜய்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close