கிரிக்கெட் போட்டியில் சோகம்.. நெஞ்சில் பந்து பட்டதால் இளைஞர் உயிரிழப்பு..!

  முத்து   | Last Modified : 10 Feb, 2020 02:50 pm
cricket-ball-hit-the-player-s-death

கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது வேகமாக வந்த பந்து தற்செயலாக நெஞ்சில் விழுந்ததால் பேட்டிங் செய்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அருகேயுள்ள அகரம் என்ற கிராமத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்தன. முதல் சுற்று முடிவடைந்து, இரண்டாவது சுற்று விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் சூனாம்பேடு பகுதியை சேர்ந்த அணியும், அச்சிறுப்பாக்கம் அணிகளும் விளையாடிக்கொண்டிருந்த போது சூனாம்பேடு பகுதியைச் சேர்ந்த சுனில் என்ற இளைஞர் பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.

எதிரணியைச் சேர்ந்த கமலேஷ் என்ற 11ஆம் வகுப்பு மாணவன் பந்து வீசியுள்ளார். பந்து சுனில் மார்பின் மீது வேகமாக பட்டுள்ளது. சுனில் உடனடியாக மார்பை பிடித்துக் கொண்டு கீழே மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்த மக்கள் உடனடியாக அவரை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி செய்து பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்சில் செல்லும் போது சுனில் துருத்தஷ்ட வசமாக உயிரிழந்துள்ளார்.

மருத்துவ மனையை அடைந்த பிறகு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சுனில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். உடனடியாக அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சூனாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close