கொரானோ வைரஸ் பரவும் பட்டியலில் இந்தியா-அதிர்ச்சியூட்டும் தகவல்!

  சாரா   | Last Modified : 10 Feb, 2020 07:01 pm
corona-virus-update

உலகின் 23 நாடுகளில் பரவி உலக நாடுகளை பீதியில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் கொரானோ வைரஸ் வெகு வேகமாக மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது.அனைத்து நாடுகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்த வைரஸ் தொடர்பான புள்ளி விபரங்களை  ஜெர்மனியில் இயங்கி வரும்  ஹம்போல்ட் பல்கலைக்கழகம் மற்றும் ராபர்ட் கௌச் இன்ஸ்டிடியூட் இணைந்து விரிவான ஆய்வறிக்கை ஒன்றை சமர்பித்து இருக்கிறது.

                                           
சீனாவில் இருந்து வைரஸ் பாதிப்புடன் வெளியேறுபவர்களை அடிப்படையாகக் கொண்டும், உலகின் பரபரப்பாக இயங்கி வரும் 4000 விமான நிலையங்கள், அவற்றிற்கு வந்து செல்லும் பயணிகள் இவற்றின் மூலம் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.அடுத்து கொரானா வைரஸ் பாதிப்பு ஆபத்தில் முதலிடத்தில் இருப்பது  தாய்லாந்து.இரண்டாம் இடத்தில்  ஜப்பான் .  தென் கொரியா, ஹாங்காங், தாய்வான் ஆகிய நாடுகள் வரிசையில் இந்தியா 17 வது இடத்தில் இருக்கிறது. அரபு நாடுகள் 19 இடத்தைப் பிடித்துள்ளது..இந்த ஆய்வறிக்கையில் எச்சரிக்கை மிகுந்த இடங்களாக குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்கள்-
புது தில்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம்,
மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம்,
கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான நிலையம் பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொச்சி விமான நிலையங்கள் அடுத்த வரிசையில் இருப்பது அச்சமூட்டும் வகையில் அமைந்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close