தெறிக்க விட்ட ஆம் ஆத்மி! காணாமல் போன காங்கிரஸ்! டெல்லி தேர்தல் முடிவு!!

  சாரா   | Last Modified : 11 Feb, 2020 03:22 pm
delhi-election-results

டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலையில் இருந்தே விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எண்ணிக்கை ஆரம்பத்த சில நிமிடங்களிலேயே ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் போட்டி போட்டுக் கொண்டு சம பலத்துடன் ஆட்டத்தைத் துவங்கியது. அதன் பிறகு நேரம் செல்ல செல்ல ஆம் ஆத்மி 43 இடங்களில் முன்னிலையும், பாஜக 16 இடங்களில் முன்னிலையும் வகித்து வருகிறது. இந்த போட்டியில் இருந்த இடமே தெரியாமல் காங்கிரஸ் காணாமல் போனது! 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 22ம் தேதியுடன் முடிவடைகிறது. 

ஆட்சி அமைக்கத் தேவையான பலத்தை ஆம் ஆத்மி இப்போதே பெற்று விட்டதாக கொண்டாட்டங்கள் டெல்லியில் களைக் கட்டத் துவங்கி விட்டன.  காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கி நிலையில் ஆம் ஆத்மி 43 இடங்களில் முன்னிலை, பாஜக 16 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதில் கொடுமை காங்கிரஸ் 1 இடத்தில் மட்டுமே முன்னிலை வகித்து வருவது தான். டெல்லியில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை பெறுவதற்கு மொத்தம் 36 இடங்களில் வெல்ல வேண்டும். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close