இந்த வெற்றி என் மனைவிக்கு பிறந்த நாள் பரிசு! நெகிழ்ந்த கெஜ்ரிவால்!!

  சாரா   | Last Modified : 11 Feb, 2020 03:40 pm
kejriwal-s-gifts-his-wife-his-partys-victory

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சட்டமன்றத் தேர்தல் வெற்றியை மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக வழங்குவதாக கூறியுள்ளார்.

டெல்லி சட்டசபைத் தேர்தலில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைப்பெற்று வரும் நிலையில், தனிப்பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி பல இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க உள்ளது. டெல்லி முழுவதும் ஆம் ஆத்மி கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால்,  இன்று அவரது பிறந்த நாளை கொண்டாடுகிறார். மனைவி சுனிதாவின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய கெஜ்ரிவால், டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி பெற்ற பெருவாரியான வெற்றியை தனது மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக வழங்குவதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். கெஜ்ரிவாலுக்காக, அவரது  மனைவி சுனிதா தீவிரமாக  பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close