டெல்லியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது ஆம் ஆத்மி! கெஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

  சாரா   | Last Modified : 11 Feb, 2020 03:47 pm
stalin-wishes-kejriwal

டெல்லி சட்டசபைத் தேர்தலில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைப்பெற்று வரும் நிலையில், தனிப்பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி பல இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க உள்ளது. டெல்லி முழுவதும் ஆம் ஆத்மி கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

 

மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி 58 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதால், மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. இந்நிலையில், டெல்லியில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

வகுப்புவாத அரசியலை வளர்ச்சித் திட்டங்கள் முறியடிக்கும் என்பதற்கு இந்த வெற்றியே உதாரணம் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாட்டின் நலனுக்காக கூட்டாட்சி உரிமைகள் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close