இடம் பத்திரப்பதிவு செய்தால் இதை கவனமா பாருங்க! அரசின் அதிரடி திட்டம்!

  சாரா   | Last Modified : 11 Feb, 2020 06:55 pm
patta-name-change-is-made-easier

வீடு, விளைநிலங்கள் என ரியல் எஸ்டேட் தமிழகம் முழுக்கவே கொடி கட்டிப் பறந்த காலம் ஒன்று இருந்தது. பல்லாயிரக்கணக்கானோர் சொந்தமாக வீடு கட்ட வேண்டுமென்று சென்னைக்கு மிக அருகில் 100 கிலோ மீட்டர் தொலைவில் எல்லாம் இடத்தை வாங்கிப் போட்டு எதிர்காலத்தில் வீடு கட்டி குழந்தைகளோடு மகிழ்ச்சியாக ரிட்டையர்மெண்ட் வாழ்க்கையையாவது வாடகைத் தொல்லை இல்லாமல் வாழலாம் என்கிற கனவுகளைச் சுமந்து உழைத்து வருகிறார்கள். 

அப்படி சென்னைக்கு சம்பந்தமேயில்லாத இடங்களில் எல்லாம் இடத்தை வாங்கிப் போட்டு விட்டு, அதன் பிறகு அந்த இடத்திற்கான பட்டா வாங்குவதற்குள் நிறைய பேருக்கு நாக்கு தள்ளிவிடுகிறது. நாளை வா’ என்று ஆறு மாத காலம் பட்டா வாங்குவதற்காக அரசு அலுவலகங்களுக்கு அலைந்து திரிந்தாலும், பர்ஸ் காலியாவது தான் மிச்சம். இடத்தை விற்றவரோ.. பட்டா வாங்கித் தருவதற்கு தனி ரேட் கேட்டு, இதோ அதோ என்று வருடக் கணக்கில் காலத்தை விரயமாக்கிக் கொண்டிருப்பார். வார இறுதி நாட்களில், குடும்பத்தோடு நேரம் செலவிடாமல் வாங்கியிருக்கும் இடத்தை காபந்து செய்ய ஒரு எட்டுப் பார்த்து விட்டு வந்துடலாம் என்று சென்னைக்கும் திண்டிவனத்திற்கும் திரிபவர்கள் ஆயிரக்கணக்கானோர்.

இனி, இதற்கெல்லாம் விடிவு காலம் வந்து விட்டது. சொத்துகளை வாங்கினால், பத்திரம் பதிவு செய்தவுடன் தானாகவே பட்டா மாறுதல் நடைபெறக்கூடிய திட்டத்தை வருவாய்த்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளர். இந்த திட்டத்தின் படி, சொத்தை பதிவு செய்தவர்களுக்கு தானாகவே அவர்களது பெயருக்கு பட்டா மாறுதல் ஆகிவிடும் என்கிற மகிழ்ச்சியான செய்தி பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இனி, வீடு கட்டுவதற்கு நிலத்தை வாங்கினால், பட்டா வாங்குவதற்காக நீங்கள் சிரமப்படத் தேவையில்லை. இது குறித்து பத்திரப்பதிவு செய்யும் போதே தெளிவாகக் கேட்டுக் கொள்ளுங்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close