மாதுளைப் பழம் சாப்பிட்டால் கருவில் இருக்கும் குழந்தைக்கு என்னாகும் தெரியுமா?

  சாரா   | Last Modified : 11 Feb, 2020 07:31 pm
how-pomegrnate-helps-pregnant-ladies

கருவுற்று இருக்கும் தாயார் மாதுளைப் பழம் சாப்பிட்டால் வளரும் குழந்தைக்கு பல்வேறு நன்மைகள் கிடைப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

ஒரு தாயின் கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு மாதுளையை ஜூஸ் எடுத்து குடித்தாலோ, அல்லது அப்படியே சாப்பிட்டாலோ, கர்ப்பத்தில் வளரும் குழந்தைக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கருவுற்ற தாய், மாதுளைபழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குறைப் பிரசவத்தை தடுக்கலாம். சிசுவுக்கு ஒவ்வொரு நாளும் தேவையான வளர்ச்சி கிடைக்க உதவுகிறது. தொப்புள் கொடியில் ஏற்படும் தொற்றை குறைக்கிறது.மாதுளைச் சாற்றில் பாலிபினாலிக் அமிலம் அதிகளவு உள்ளது, இவை கருச்சிதைவைத் தடுக்கிறது. எதாவது காரணத்தால் கருவிற்கு குறைவான ஆக்ஸிஜன் கிடைக்க நேரிட்டால், தாயாரின் உடலில் உள்ள மாதுளைப்பழ சத்து அதை சமன் செய்கிறது.

                                          

பத்தில் ஒரு குழந்தை வளர்ச்சிக் குறைவால் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. தொப்புள் கொடியால் ஏற்படும் இந்தப் பிரச்சினையை மாதுளைப்பழத்தால் கிடைக்கும் ஆக்சிஜன் சீர் படுத்துகிறது.78 தாய்மார்களை 23 முதல் 44 வார கர்ப்பகாலத்தில் மாதுளைப் பழ ஜூஸ் கொடுத்து ஆராய்ச்சி செய்தார்கள். 250 மில்லி மாதுளை ஜூஸ் கொடுக்கப்பட்ட தாயின் கருவில் வளரும் கருவின் மூளையின் இரத்த ஓட்டம் சீராக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

மாதுளை சாப்பிடுங்க. தாயும் சேயும் நலமாக இருங்க!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close