கொரனோ வைரஸ் பாதிப்பால் பண மழையில் நனையும் இந்திய நிறுவனங்கள்..!

  சாரா   | Last Modified : 11 Feb, 2020 08:48 pm
corono-virus-update

கொரனோ வைரஸ் பாதிப்பால் சீனா மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், அது இந்திய அரசுக்கு சாதகமாக மாறியுள்ளது. இங்குள்ள பல்வேறு நிறுவனங்கள் நல்ல லாபத்தை ஈட்டி வருகின்றன.சீனாவில் தொடங்கிய கொரனோ வைரஸ் பாதிப்பால் மனித இனத்துக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பை கட்டுப்படுத்த சீனா திண்டாடி வரும் நிலையில், உலக நாடுகள் பல செய்வதறியாது திகைத்து நிற்கின்றன.

இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 900-க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாக சீன அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமற்ற வகையில் மேலும் உயிரழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.உயரினங்கள் மூலம் மட்டுமில்லாமல், உயிரற்ற பொருட்கள் வழியிலும் இந்த வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதனால் சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்குச் செல்லும் பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே அந்தந்த நாட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

                                          

அமெரிக்கா, இலங்கை குறிப்பிட்ட ஐரோப்பிய நாடுகள் பல சீனாவுக்குள் இருந்து யாரும் தங்கள் நாடுகளுக்கு வரவேண்டாம் என திட்டவட்டமாக அறிவித்துவிட்டன. மேலும், சீனாவில் இருந்து தயாராகி மற்ற நாடுகளுக்கு வரும் பொருட்களை வாங்கவும் மக்கள் அச்சப்படுகின்றனர்.கொரனோ வைரஸ் பாதிப்பால் நிலைகுலைந்து போயுள்ள சீனா, தற்போது உயிரிழப்புகள் மட்டுமின்றி பொருளாதார இழப்பையும் சந்தித்து வருகிறது.  இந்த நிலை மேலும் தொடரும் என்பது தானே இதிலிருக்கும் கவலை தரக்கூடிய செய்தி.

சீனாவில் இருந்து மற்ற நாடுகளில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்திய அரசே சீனாவின் குறிப்பிட்ட மாகாணங்களில் இருந்து கிடைக்கும் பொருட்களுக்கு தடை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் பொறியியல் சார்ந்த பொருட்கள், ஆயத்த ஆடைகள், பருந்தி, பட்டு, ஃபேஷன் பொருட்கள், செராமிக், வீட்டு பயன்பாட்டு பொருட்கள் ஆகியவற்றை வாங்க, உலக வியாபாரிகள் இந்தியா பக்கம் திரும்பியுள்ளனர்.

                                               

மேலும், தொடர்ந்து பொருட்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையிலும் வெளிநாட்டினர் பலர், இந்திய வியாபாரிகளோடு ஈடுபட்டுள்ளனர். இந்தியப் பொருட்களை வாங்க அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அதிகம் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.இதுதவிர, ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் சர்வதேச செராமிக் பொருட்கள் கண்காட்சியில் கலந்து கொண்ட 55 இந்திய நிறுவனங்களிடம், ஏற்றுமதி தொடர்பாக பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

அதை தொடர்ந்து, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியாவின் டெக்ஸ்டைல் துறைக்கு ஆடர்கள் குவிந்து வருகிறதாம். மேலும், கெமிக்கல் துறை, கடல் பொருட்கள், மெக்கானிக்கல் துறை போன்ற துறைகளிலும் இந்திய நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் குவிந்து வருகிறது.

ஆசியாவில் வல்லரசு நாடாக விளங்கி வரும் சீனாவுக்கு கொரனோ வைரஸ் பெரிய தலைவலியாக அமைந்துள்ளது. இதை வைத்து இந்திய நிறுவனங்கள் பணம் சம்பாதிப்பது சீனாவுக்கு மேலும் குடைச்சலை அதிகப்படுத்தியுள்ளது. இநிநிலையில் கொரனோ வைரஸ் பாதிப்பில் இருந்து சீனாவை மீட்க அந்நாட்டு அரசு தீவிர கதியில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close