அனைத்து சிறைச்சாலைகளிலும் ரேடியோ வசதி

  சாரா   | Last Modified : 11 Feb, 2020 08:54 pm
all-up-jails-to-have-radio-station-by-2021

சிறைவாசிகளுக்கு நற்பண்புகளை கற்பிக்கும் விதத்திலும், அவர்கள் மனம் திருந்தி வாழ உதவும் வகையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் வானொலி நிலையம் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.உத்தரப் பிரதேசத்திலுள்ள 70 சிறைச்சாலைகளிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. முதற்கட்டமாக அங்குள்ல 26 சிறைச்சாலைகளில் வானொலி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை கைதிகள் நிர்வகித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேடியோ நிலையங்களை போலில்லாமல் உ.,பி சிறைச்சாலை வானொலிகள் customised public address systems என்கிற ரேடியோ நெட்வொர்க்கில் செயல்படுத்தப்படவுள்ளன. இதனால் குறிப்பிட்ட அலைவரிசைக்குள் தான் இந்த வானொலியை கேட்க முடியும்.வானொலிக்கு தேவையான அறைகள், கருவிகளை அரசு வழங்கியுள்ளது. நிபுணர்களுடைய உதவியின் மூலம், கைதிகளே இந்த சிறைச்சாலை வானொலிகளை கட்டமைக்கவுள்ளனர். நிபுணர்கள் தரும் பயிற்சியை தொடர்து, அவர்களே அந்த வானொலி நிலையங்கள் நிர்வகிப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

                                             

மேலும், கைதிகள் தங்கியுள்ள அனைத்து அறைகளிலும் ஒலிப்பெருக்கிகள் பொருத்தப்படும். அதன்மூலம் மற்ற கைதிகளும் வானொலி நிகழ்ச்சிகளை கேட்க முடியும். இதற்கிடையில் திரைப்பட பாடல்கள், இன்னிசை நிகழ்ச்சிகளை சிறைச்சாலை ரேடியோக்களில் ஒலிப்பரப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.கைதிகள் தங்கள் விரும்பும் பாடல்களை காகிதத்தில் எழுதி ரேடியோ நிலையத்திற்க்கு அனுப்பலாம். அங்கு பணியாற்றும் ரேடியோ ஜாக்கி பாடலை ஒலிப்பரப்புவார்கள். ரேடியோ துறையில் ஆர்வமுள்ள கைதிகளுக்கு பயிற்சி அளிக்க பல ரேடியோ ஜாக்கிகளும் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் அறிவுசார்ந்த போதனைகள், நீதிமன்ற விசாரணை தொடர்பான அறிவிப்புகள், சிறைக்குள் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சி குறித்த அறிவிப்புகள், திட்டப்பணிகள் தொடர்பான அறிவிப்புகளை ரேடியோ மூலம் கைதிகளுக்கு கொண்டு சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.இதுதவிர, கைதிகள் மனம் திருந்தி வாழ்வதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் ரேடியோவில் ஒலிப்பரப்படவுள்ளது. மேலும், சிறைச்சாலை ரேடியோக்களில் கைதிகள் தங்கள் குற்றங்களுக்கு சட்டரீதியிலான நடவடிக்கைகளை எவ்வாறு அணுகலாம் என்பது தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்தவும் உ.பி மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close