மனைவியை கொன்றுவிட்டு நாடகம்.. சிக்கும் யோகா ஆசிரியர்? கள்ளக்காதலே காணரம் என மாமியார் புகார்..

  முத்து   | Last Modified : 12 Feb, 2020 07:50 am
husband-killed-his-wife-and-acted-vellore

தேனி மாவட்டம் ஓரகுண்டா பகுதியில் கருப்பசாமி(30) - ஜீவிதா(27) தம்பதியர் வசித்து வந்தனர். இவர்கள் இரண்டு பேருமே யோகா ஆசிரியர்களாக இருந்து வந்த நிலையில், வேலூரில் உள்ள ஒரு யோகா மையத்தில் இரண்டு பேருக்கும் வேலை கிடைத்துள்ளது.  திருமணம் ஆன பிறகு கருப்பசாமியும், ஜீவிதாவும் சேலத்தில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி வந்துள்ளனர். இந்நிலையில் திருமணம் ஆனதிலிருந்தே இரண்டு வருடமும் இவர்களுக்கள் தகராறு நடந்து வந்துள்ளது. இதேபோல கடந்த 9 ஆம் தேதியும் அவர்களுக்குள் சண்டை வந்துள்ளது.

உடனே ஜீவிதா அவரது அம்மாவுக்கு போன் செய்து வீட்டில் நடந்த அனைத்தையும் கூறியுள்ளார். ஜீவிதா போன் செய்த சில மணி நேரங்களிலேயே கருப்பசாமி போன் செய்து, உங்கள் மகள் தூக்கு மாட்டிக்கிட்டா என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனே சேலத்திற்குக் கிளம்பிச் சென்று ஜீவிதா வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது ஜீவிதா மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள்,  கருப்பசாமி மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரில் கருப்பசாமிக்கும் வேறொரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அதனால் தான் அவர் தங்கள் மகளை துன்புறுத்தி கொலை செய்து விட்டார் என்றும் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கருப்பசாமியை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close