உதவிக்கு அழைத்த நண்பனால் வந்த வினை.. பள்ளி சிறார்களால் சீரழிக்கப்பட்ட பெண்..!

  முத்து   | Last Modified : 12 Feb, 2020 12:17 pm
minors-held-gang-raped-woman

பள்ளி மாணவர்கள் பலர் ஒன்று சேர்ந்து ஒரு பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது. தெலங்கானாவில் உள்ள கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் கடந்த 6 ஆம் தேதி ஹைதராபாத்தில் இருந்து ரயிலில் புறப்பட்டு காலை 7 மணிக்கு மெஹபூபாபாத்துக்கு வந்தார். அப்போது அவரிடம் பணமில்லாமல் திண்டாடிய போது அந்த ஊரிலுள்ள தன்னுடைய ஆண் நண்பருக்கு பணம் கேட்டு போன் செய்தார். அப்போது அங்கு அவரை தேடி வந்த பெண்ணின் நண்பர் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றார்.

சிறிது தூரம் சென்றதும் ஒரு மாந்தோப்புக்கு அவரை அழைத்துச்சென்று அப்பெண்ணை நண்பர் பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் அவர் தனது நண்பர்களான பள்ளி மாணவர்களுக்கு தகவல் தெரிவித்து வரவைத்தார். மொத்தம் ஒன்பது பேர் சேர்ந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர். பின்னர் மதியம் நேரத்தில் அந்த வழியாக சென்றவர்கள் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்குசென்றப்போது மாணவர்கள் தப்பியோடினர்.

பின்னர் இது தொடர்பான புகாரில் போலீசார் விசாரைணை நடத்தினர். அப்போது பள்ளிக்கு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் அதனை கட்அடித்துவிட்டு பாலியல் பலாத்காரம் செய்ய சென்றது தெரியவந்தது. மேலும் பெண் உதவிக்கு அழைத்த நண்பர் உள்பட மாணவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close