கடுமையான அனீமீயாவை கட்டுப்படுத்தும் 10 ரூபாய் பொருள்

  சாரா   | Last Modified : 12 Feb, 2020 07:29 pm
health-tips-hemoglobin
இரும்புச்சத்து குறைபாடு முன்பு டாக்டர்கள் பயன்படுத்திய வார்த்தையை இப்போது மக்களும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அயர்ன் கம்மியா இருக்கு போல அதான் சோர்வா இருக்கு இப்படி அறிகுறியை வைத்து கண்டுபிடித்தாலும் அதற்கு மாற்றாக என்ன செய்வது என்ற குழப்பமும் இல்லாமல் இல்லை. 

இரும்புச்சத்து குறைபாடு அவ்வளவு பெரிய விஷயமா என்று கேட்கலாம். ஆனால் இந்த குறைபாடு தான் நாளடவில் தீவிர இரத்த சோகையை உண்டு செய்து விடும் என்று எச்சரிக்கிறது மருத்துவம். இதனால் ஹீமோகுளோபின் அளவு கணிசமாக குறைந்து கடுமையான அனீமியாவுக்கு உள்ளாக நேரிடலாம். 
               
ஆனால் உணவு பழக்கத்தில் மாற்றங்கள் இருந்தாலும் சில பொருள்களை தவறாமல் உணவில் சேர்க்கும் போது போதுமான இரும்புச்சத்து, மினரல், வைட்டமின்கள், தாது உப்புக்கள் கிடைத்துவிடும். அந்த வகையில் இரும்புச்சத்தை அதிகரிக்க கூடிய உணவு பொருளில் விலை மலிவான அபரிமிதமான பொருள் என்றால் அது முருங்கைக்கீரை தான். முருங்கைக்கீரை இரும்புச்சத்து மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் பல குறைபாட்டை களையும் அற்புத மருந்தாக இருக்கிறது என்கின்றன ஆய்வுகள். ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பது பரிசோதனையில் தெரிந்தால் முருங்கைக்கீரையை இப்படி சமைத்து சாப்பிடுங்கள். ஒரே மாதத்தில் கணிசமாக உயர்ந்திருக்கும். 

முருங்கைக்கீரையை சுத்தம் செய்து கொள்ளுங்கள். பூண்டு பல்லை தோலுரித்து வைத்துகொள்ளுங்கள். வாணலியில் நெய் விட்டு முருங்கைக்கீரை, பூண்டு தேவையெனில் சாம்பார் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்குங்கள். இறக்கும் போது இலேசாக உப்பு சேர்த்து கிளறி சாதத்தோடு பிசைந்து சாப்பிடுங்கள். இன்று வளரும் பிள்ளைகள், இளவயது பிள்ளைகள் கடுமையான ஹீமோகுளோபின் குறைபாட்டை கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வாரத்துக்கு மூன்று நாட்களாவது இப்படி செய்து கொடுங்கள். 

ஒரே மாதத்தில்ஹீமோகுளோபின் அளவு உயர்ந்திருப்பதை கண்டு ஆச்சரியப்படுவீர்கள் முருங்கைக்கீரை வீட்டுக்கு வீடு மரம் வளர்த்த காலம் போய்விட்டது. இன்று விற்பனைக்கு வந்துவிட்டது. ஆனால் 10 ருபாய் கட்டில் நம் உடல் ஆரோக்கியம் பெற்றுவிடுகிறது என்பது ஆச்சர்யமான உண்மைதான் என்பதை மறுப்பதற்கில்லை. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close