ஒரே மாதத்தில் தொப்பை குறையணுமா. சிம்பிளான வழி இதுதான்..

  சாரா   | Last Modified : 12 Feb, 2020 07:28 pm
fat-burn-in-30-days
தொப்பை பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருந்துவருகிறது. சிறுவர்கள் முதல் நடுத்தர மக்கள் வரை அனைவரும் அவதிப்படுவது தொப்பை பிரச்சனைக்கு என்று கூட சொல்லலாம். உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் அனைத்தும் வயிற்றில் அதிகம் தேங்கிவிடுவதால் அந்த இடத்தில் தொப்பையும் எளிதாக வருகிறது.உடல் உழைப்பின்மை, உணவு முறை மாற்றம், எண்ணெய் தின்பண்டங்கள் இப்படி எல்லாமாய் சேர்ந்து நமக்கு கொடுத்த பரிசுதான் அதிகரித்துவரும் உடல் எடை.

உடல் எடை அதிகரிப்பால் அவதி என்பதை தாண்டி தொப்பையால் அவதிபடுபவர்கள் அதிகம். குறிப்பாக பெண்கள். டீன் ஏஜ் பெண்கள் தொப்பையை குறைக்கிறேன் என்று போதிய ஊட்டசத்து உணவை எடுப்பதில்லை. இதனால் குண்டு உடல் சத்தில்லாமல் போவதோடு இரும்புச்சத்து குறைபாடு உண்டாகி அனீமியா என்னும் இரத்த சோகை வரை உண்டாக்கிவிடுகிறது. ஆனாலும் தொப்பை மட்டும் இருக்கிறது என்று கவலைகொள்வார்கள். 
              

சற்று பொறுமையோடு கவனத்தோடு இதை கடைபிடித்தால் ஒரே மாதத்தில் ஆச்சரியத்தக்க வகையில் தொப்பை குறையும். 
தினமும் காலையில் எழுந்ததும் எலுமிச்சம் பழத்தின் சாறை பிழியுங்கள்.மிதமான சூட்டில் ஒரு தம்ளர் வெந்நீரில் பழத்தின் சாறை பிழிந்து, இரண்டு டீஸ்பூன் சுத்தமான் தேன் கலந்து குடியுங்கள். பிறகு அரைமணி நேரத்துக்கு எதுவும் சாப்பிடவேண்டாம். இப்படியே தொடர்ந்து செய்து வந்தால் கெட்ட கொழுப்புகள் குறைந்து ஒரே மாதத்தில் தொப்பை குறைய தொடங்கும். அதே நேரம் உணவிலும் கட்டுப்பாடு தேவை என்பதை சொல்ல தேவையில்லை. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close