தொழிலாளிக்கு அடித்த திடீர் அதிர்ஷ்டம்! ஒரே நேரத்தில் ரூ12 கோடி பரிசு!

  சாரா   | Last Modified : 13 Feb, 2020 05:20 pm
12-crore-in-lottery-ticket

கொடுக்குற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு தரும் என்பார்கள். அப்படி சமயங்களில் தெய்வம் கஷ்டப்படுகிறவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைக்கிறது. கேரள மாநிலம் கண்ணூரில் வசித்து வருபவர் ராஜன். தினக்கூலி வேலைப் பார்த்து, தன் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். இவரது வாழ்வில் ஒளியேற்றும் விதமாக ரூ. 12 கோடி பரிசு கிடைத்துள்ளது.

கேரளாவில்,  அரசு சார்பில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, ஓணம் போன்ற பண்டிகை நாட்களில் இந்த வகையான லாட்டரிகளில் பம்பர் குலுக்கல்கள் நடைபெறுவது வழக்கம்.

அப்படி அந்த பம்பர் குலுக்கல் லாட்டரி சீட்டை வாங்கிய ராஜனுக்கு, குலுக்கலில் அவர் வாங்கியிருந்த சீட்டு எண்ணுக்கு ரூ.12 கோடி பரிசு கிடைத்துள்ளது. ஒரே நாளில் தினக்கூலியாக இருந்து கோடீஸ்வரரான ராஜன், இந்த அதிர்ஷ்டம் குறித்து கூறும் போது, நான் அடிக்கடி லாட்டரி சீட்டு வாங்குவதில்லை. நாம் கும்பிடும் தெய்வம் என்றாவது கண்ணைத் திறக்காத என்று கையில் பணம் இருக்கும் சமயங்களில் மட்டுமே, வீட்டு செலவுக்கு கொடுத்த பணம் போக, மீதியிருக்கும் பணத்தை இரண்டு அல்லது மூன்று சீட்டுக்கள் வாங்குவேன். இந்த பரிசுத் தொகையை வைத்து என் மகள்களுக்கு நல்ல முறையில் திருமணம் செய்து வைப்பேன் என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close