காரில் வந்து ஆடுகளை திருடிய கும்பல்.. சந்தையில் சுற்றி வளைத்த போலீஸ்..

  முத்து   | Last Modified : 14 Feb, 2020 07:19 am
nellai-sheep-theft-catch-cctv

நெல்லையில் சாலைகளில் திரியும் ஆடுகளை கார்களில் வந்து கடத்திச் சென்ற நூதன கொள்ளை கும்பலை போலீசார் காத்திருந்து கைது செய்தனர். நெல்லை மாநகரப் பகுதியான அருகன்குளம் சேந்திமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில மாதங்களாகவே ஆடுகள் திருட்டு போவது அதிகரித்தது. கடந்த நவம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை 40க்கும் அதிகமான ஆடுகள் காணாமல் போனதாக புகார் எழுந்தது. இதுபற்றி காவல்நிலையத்தில் புகார் அளித்தும் ஆடுகள் திருடுவது தொடர்கதையாக நீடித்தது.

இந்நிலையில், அருகன்குளம் பகுதியைச் சேர்ந்த பிச்சுமணி என்பவர் தனது வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தினார். அந்த சிசிடிவி கேமரா மூலம் சிக்கியது ஆடுபிடிக்கும் கும்பல். கடந்த 4ஆம் தேதி பதிவான காட்சிகளை பார்த்தபோது, காரில் வரும் கும்பல் சாலையில் திரியும் ஆடுகளை பிடித்து காரில் அள்ளிப் போட்டு சென்றது தெரியவந்தது. 

இதன் அடிப்படையில் நடத்திய விசாரணையில், மேலப்பாளையம் குறிச்சியை சேர்ந்த சங்கர், சுந்தரவேல், பகவதி, மகாராஜன், மாயாண்டி ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த ஆடு திருட்டில் மூளையாக செயல்பட்ட பேராட்சி என்பவரை மேலப்பாளையம் சந்தையில் ஆடுகளை விற்க வந்தபோது காவல்துறையினர் கைது செய்தனர்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close