2வது மனைவியை சிதைத்த கணவர்!! முதல் மனைவியால் அதிர்ச்சி!! நடுநடுங்க வைத்த கொடூர சம்பவம்!!

  முத்து   | Last Modified : 14 Feb, 2020 10:18 am
husband-killed-wife-in-mexico

மெக்சிகோவை சேர்ந்தவர் எரிக் பிரான்சிஸ்கோ ரோப்லெடோ(46). இவர் முதல் மனைவியை பிரிந்து இரண்டாவதாக இங்க்ரிட் எஸ்கமில்லா(25) என்ற இளம் பெண் ஒருவரை திருமணம் செய்திருந்தார். இவர்களுக்குள் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று எரிக் பிரான்சிஸ்கோ கடும் போதையில் இருந்த போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த எரிக், உடனே வீட்டின் சமையல்அறைக்குள் சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து தனது மனைவியின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த மனைவியை மீண்டும் கொடூரமாக குத்தி கொலை செய்தார்.

பின்னர் போலீசாரிடம் சிக்காமல் இருக்க ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு அவரது தலையிலிருந்து கால் வரை தோலை உரித்து உடல் உறுப்புகளை துண்டு துண்டாக வெட்டி அங்கிருந்த கால்வாயில் வீசி எறிந்துள்ளார். அதனை தொடர்ந்து கொலை செய்ததற்கான தடயத்தையெல்லாம் அழித்து விட்டு, தனது முதல் மனைவிக்கு போன் செய்து கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே இந்த கொலை குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அவரது வீட்டிற்கு விரைந்த போலீசார் எரிக்கை கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் மனைவியின் உடலை தனித்தனி பாகங்களாக மீட்டு, எரிக்கை சிறையில் அடைத்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close