எந்த முதல்வருக்கும் அழைப்பில்லை! கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினரான குழந்தை!

  சாரா   | Last Modified : 14 Feb, 2020 10:14 am
special-invite-to-baby-muffler-man-for-cm-s-function

கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவில் கலந்துக் கொள்வதற்கு  ‘பேபி மப்ளர் மேனு’க்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எந்த மாநிலத்தின் முதல்வருக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு இல்லை.

டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, ஆம் ஆத்மி கட்சிக்காரர் ஒருவரின் குழந்தையான ஆவ்யன் தோமர் என்ற 1 வயது குழந்தை, அச்சு அசலாக கெஜ்ரிவால் போல உடையணிந்து அக்கட்சி அலுவலகம் முன்பாக உலா வந்தது. பலரது கவனத்தையும் ஈர்த்த அந்தக் குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களிலும் வைரல் ஆனது. இந்நிலையில் வருகிற 16ம் தேதி கெஜ்ரிவால் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள விழாவில் கலந்து கொள்ள அந்தக் குழந்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வேறு எந்த மாநில முதல் மந்திரிகளையும், அரசியல் கட்சி தலைவர்களையும் அழைக்கப்போவதில்லை என்றும் அக்கட்சி தெரிவித்தது.

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல்வராக கெஜ்ரிவால் பதவி ஏற்கிறார். அவர், முதல்வாவது இது தொடர்ந்து 3வது முறை. டெல்லி ராமலீலா மைதானத்தில் காலை 10 மணிக்கு பதவி ஏற்பு விழா பிரமாண்டமாக நடக்கிறது. கெஜ்ரிவாலுடன் எல்லா கேபினட் மந்திரிகளும் பதவி ஏற்கிறார்கள். பதவி ஏற்பு விழாவில், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா கேட்டுக்கொண்டார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close