தமிழக பட்ஜெட்!  59,000 ஆயிரம் கோடி கடன் பெற திட்டம்!

  சாரா   | Last Modified : 14 Feb, 2020 10:27 am
tn-budget-special

இன்று தமிழகத்தில் 2020 - 2021 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார்! தமிழகத்தில் சுமார் 21,000 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் நிலுவைக் கடன் ரூ.4,56,660 கோடி ரூபாய்கள் உள்ளன.

சுகாதாரத்துறைக்கு ரூ.15,863 கோடி ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாய் ரூ.2.19 லட்சம் கோடி ரூபாய். மின்சாரத்துறைக்கு ரூ.20,115 கோடி ரூபாயும், கல்வித்துறைக்கு 34,841 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

வரும் நிதியாண்டில் மேலும் சுமார்  59,000 கோடி ரூபாய் தமிழக அரசு கடன் பெற திட்டம். 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ரூ.1200 கோடி ஒதுக்கீடு! அதே சமயம் தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.74.08 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை பெங்களூர் தொழில்வடத்திட்டத்தின் கீழ் பொன்னேரியில் 21,966 ஏக்கரில் தொழில் முனைய மேம்பாட்டு திட்டம்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close