தமிழக பட்ஜெட்! மக்களுக்கு பயனுள்ள பல அதிரடி அறிவிப்புகள்!

  சாரா   | Last Modified : 14 Feb, 2020 11:17 am
tn-budget-2020-tit-bits

தமிழகத்திற்கு 2020-21ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

இந்த பட்ஜெட்டில், முதல்வரின் பசுமை வீடு திட்டம்! இந்த திட்டத்தில் கட்டப்படும் வீடு ஒன்றுக்கு கட்டுமான செலவை ரூபாய் 2.10 லட்சமாக உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிர்பயா நிதியின் கீழ் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரூ.75.02 கோடிகளில் பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்.

அம்மா உணவகத் திட்டத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏழைக் குடும்பங்களுக்கு எல்ஐசியுடன் இணைந்து விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும்.

விபத்தில் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் வரை இழப்பீடு அளிக்கப்படும்.

விபத்து உள்ளிட்டவற்றில் அகால மரணம் அடைவோருக்கு இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும்.

இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கான இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்.

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக்  கல்லூரிகள் அமைக்க ரூ.1200 கோடி ஒதுக்கீடு

நெடுஞ்சாலைத் துறை பாதுகாப்புக்காக தனியாக ஒரு துறை உருவாக்கப்படும்.

முத்திரை தாள் வரி 1% இருந்து 0.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் கார்டு இருந்தால் எந்தக் கடையிலும் பொருட்களை வாங்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.

தமிழகத்தில் 37 மாவட்டங்களிலும் முதியோர் ஆதரவு மையங்கள் தொடங்கப்படும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close