சென்னை சிறப்பு எஸ்.ஐ மீது மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு.. நடவடிக்கை எடுக்க போலீசில் புகார்!

  முத்து   | Last Modified : 14 Feb, 2020 11:25 am
wife-complaint-against-chennai-police-sub-inspector

சென்னை வேப்பேரியை சேர்ந்த பானுரேகா என்பவர், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஜெயலட்சுமியிடம் புகார் ஒன்று அளித்தார். அதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் தன் கணவன் மீது குற்றஞ்சாட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். 

மேலும் அந்த கடிதத்தில், தனது முன்னாள் கணவர் பிரபாகரன் காசிமேடு ஸ்டேஷனில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். கடந்த 1994ஆம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமையினால் அவரை பிரிந்து வந்ததாக கூறியுள்ளார். பின்னர் 1995ஆம் ஆவது திருமணம் செய்தேன். அதன்மூலம் ஒரு பெண் குழந்தை உள்ளது.

2ஆவது கணவரிடம் எனக்கும் பிரபாகரனுக்கும் நடந்த திருமண பதிவுச் சான்றிதழ்களை காட்டியதால் அவரும் பிரிந்து சென்றுவிட்டார். இதேபோல் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற திருமணமும் பிரிவில் முடிந்தது. தற்போது 2 குழந்தைகளுக்காக உயிர் வாழ்ந்து வருகிறேன். இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு உறவினர் திருமணத்துக்காக சென்னைக்கு வந்தபோது முதல் கணவரான பிரபாகரனை சந்திக்க நேரிட்டது. அப்போது, தான் திருந்திவிட்டதாகவும், ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்று கூறியதால் அதனை நம்பி மனமிறங்கினேன்.

இதனால் பெங்களூரிலிருந்து சென்னை வந்து அவருடன் குடும்பம் நடத்தினேன். ஆனால் அவர் திருந்தவே இல்லை. வீட்டுக்கு மதுபோதையில்தான் வருவார். நகை, பணம் கேட்டு சித்ரவதை செய்வார். அவருக்கு சில பெண்களுடன் பழக்கம் இருப்பது தெரியவந்தது. அதனால் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது புகாரில் அப்பெண் கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, பானுரேகாவின் குற்றச்சாட்டை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மறுத்துள்ளதாக தெரிகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close