1,28,463 குடும்பங்களுக்கு இலவச பட்டா! பட்ஜெட்டில் அறிவிப்பு!!

  சாரா   | Last Modified : 14 Feb, 2020 11:26 am
free-patta-for-1-28-463-households

தமிழகத்திற்கு 2020-21ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

தகுதி வாய்ந்த நபர்களுக்கு இலவச வீட்டு வசதி வழங்கப்படும் என்று பட்ஜெட் உரையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

2020-21 நிதியாண்டிற்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றி வரும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., குடிமராமத்து பணிகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு உலக வங்கியிடமிருந்து கடன் என்றும், சுகாதாரத்துறைக்கு ரூ.15 ஆயிரம் கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தகுதி வாய்ந்த நபர்களுக்கு இலவச வீட்டு வசதி வழங்கப்படும். இதுவரை ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசித்து வந்த ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 463 குடும்பங்களுக்கு 35 ஆயிரத்து 470 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும் என்றும், மீதம் உள்ள குடும்பங்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close