ஓ.பி.எஸ் பதவி தப்பியது! 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு! சபாநாயகரே முடிவெடுக்கலாம்! நீதிமன்றம் தீர்ப்பு!

  சாரா   | Last Modified : 14 Feb, 2020 01:20 pm
11-mlas-remove-eligibility-case-speaker-can-decide

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தின் மர்மம் ஆண்டுகள் உருண்டோடியும் விலகாத நிலையில், அவரது மரணத்திற்குப் பின்னர் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்களும், அதளப் பாதாளத்திற்கு சரிந்த தலைவர்களின் இமேஜ்களும் நாடு முழுக்கவே கேலிக் கூத்தாக சந்தி சிரிக்க வைத்தது.

கடந்த 2017ம் ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதும்,  தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இந்நிலையில், 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக தரப்பில் அப்போது சபாநாயகர் தனபாலிடம் மனு கொடுக்கப்பட்டது. திமுகவின் மனு மீது சபாநாயகர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், திமுக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்நிலையில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வழக்கில், கடந்த 3 ஆண்டுகளாக 11 எம்.எல்.ஏக்கள் மீது  எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலதாமதம் செய்து வருவது ஏன் என உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது. 

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகரே முடிவெடுக்கலாம் என்றும், சபாநாயகருக்கு இந்த விவகாரத்தில் முடிவெடுக்க கால அவகாசம் எதுவும் விதிக்க முடியாது என்று கூறிய நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close