காதலர் தினம்! களை கட்டிய முதலியார் குப்பம் படகு குழாம்!

  சாரா   | Last Modified : 14 Feb, 2020 06:48 pm
mudaliar-kuppam-boat-house

இத்தனை நாட்களாக குளிர் வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சென்னையை, தை மாதம் முடிந்து வெயிலில் வறுத்தெடுக்க தனது கதிர்களை வீசத் துவங்கியிருக்கிறது சூரியன்.

உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் காதலர் தினம், சென்னை முதலியார் குப்பத்தில் இன்று களை கட்டியது. பட்ஜெட் சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாகும், நிஜமாகவே சென்னைக்கு மிக அருகில் ஒரே நாளில் சென்று பார்த்து ரசித்து, மகிழ்ச்சியோடு திரும்பி வருவதற்கு ஏற்ற இடமாக இருக்கிறது முதலியார்குப்பம் படகு குழாம்.

 

வார இறுதியில் காதலர் தினமும் அமைந்து விட்டதால், இன்று படகு குழாம் முழுக்கவே காதல் ஜோடிகள் தங்களது காதலர் தின வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். பிற பூங்காக்கள், கடற்கரை போன்ற இடங்களில் காதலர்கள் செய்கிற அநாகரீக சேட்டைகள் ஏதுமில்லாதது ஆறுதல். குடும்பத்தோடு குதூகலிக்கிற இடமாகவும் அமைந்திருக்கிறது.

ஜோடியாக படகு சவாரியும் செய்யலாம் என்பது கூடுதல் அட்ராக்‌ஷன். படகுகளில் பயணிக்கும் போது, படகுகள் தண்ணீரை கிழித்துக் கொண்டு செல்கின்ற போது, உடலை சிலிர்க்க வைக்கும் விதமாக தண்ணீர் துளிகள் மேலே படுவது கூடுதல் சுகம். அதனால் தானோ என்னவோ இங்குள்ள சுற்றுலாப் படகு இல்லத்தை, மழைத்துளி படகு குழாம் என்று அழைக்கிறார்கள்.

காதலர்கள் மட்டும் தான் காதலைக் கொண்டாட வேண்டுமா என்ன? கல்யாணம் ஆனவர்களும் கால காலத்துக்கும் தங்களது காதலைக் கொண்டாடலாம் தானே? அடுத்த முறை வார இறுதி சுற்றுலாவிற்கு திட்டமிடும் போது, உங்கள் ஜோடிப் பறவையோடு... முதலியார் குப்பம் சென்று ரசித்துப் பாருங்கள்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close