நடிகை ரைசாவின் காதலர் இவர் தானாம்! பகீரங்க அறிவிப்பு! காதலர் தின சர்பைரஸ்!

  சாரா   | Last Modified : 14 Feb, 2020 08:06 pm
bigboss-raisa-s-lover

பிக்பாஸ் பிரபலமான ரைசா வில்சன் காதலர் தினமான இன்று தனது காதலரை, இவர் தான் என்னுடைய காதலர் என்று அறிமுகப்படுத்தி உள்ளார்.

பிக்பாஸ் மூலமாக தமிழ் ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலமானவர் ரைசா வில்சன்.  பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஹரிஸ் கல்யாண் - ரைசா இணைந்து பியர் பிரேமா காதல் படத்தில் நடித்தனர். இந்த படத்திற்கு பின்னர், ரைசா ஹரிஸ் கல்யாணுடன் டேட்டிங் செய்து வருவதாக கூறி வந்தனர்.  இந்நிலையில், காதலர் தினமான இன்று தனது காதலர் யார் என்று ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துவேன் என்று நேற்று ட்விட்டரில் ரைசா கூறியிருந்தார். இதற்கு நடிகை ஓவியா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் நடிகை ரைசாவிற்கு வாழ்த்துகள் தெரவித்து வந்தனர். 

நேற்று கூறியிருந்ததைப் போலவே காதலர் தினமான இன்று தனது காதலன் யார் என்பதனை புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் மூலம் அறிமுகமான வால்டர் பிலிப்ஸ் தான் தன்னுடைய காதலர் என அறிமுகப்படுத்தியுள்ள ரைசா, இருவரும் இணைந்து ஹாஷ்டேக் லவ் என்ற படத்தில் தற்போது நடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close