இடிச்சல! ரூ12,00,000 கொடு!! அரசு பஸ்ஸை ஜப்தி செய்த விவசாயி!!

  முத்து   | Last Modified : 15 Feb, 2020 01:49 pm
govt-bus-accident

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகாவிற்கு உட்பட்ட கும்மிலிபட்டியைச் சேர்ந்தவர் சின்னு. இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த போது அரசு பேருந்து ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவர், இனி என்னால் பணிக்கு செல்ல இயலாது எனது குடும்பத்தை நான் காப்பாற்ற எனக்கு போக்குவரத்து கழகம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் சின்னுவுக்கு ரூ. 12 லட்சத்து ஏழாயிரம் வழங்க போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டனர். ஆனால் போக்குவரத்து கழகம் இழப்பீடு எதுவும் வழங்காததால் அவர் மீண்டும் நிறைவேற்றுவதற்கான மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் 2 ஆண்டுகள் கடந்தும் இழப்பீடு வழங்காததால் விபத்தை ஏற்படுத்திய திண்டுக்கல் to திருச்சி வரை செல்லக்கூடிய அரசு பேருந்தை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டார். அதன்படி பேருந்து நிலையத்திற்கு காலையில் பயணிகளை ஏற்ற வந்த அரசு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் பேருந்தை ஜப்தி செய்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close