தமிழகத்தில் விடிய விடிய முஸ்லீம்கள் போராட்டம்!!!

  முத்து   | Last Modified : 15 Feb, 2020 01:50 pm
protest-against-caa-nrc-in-chennai

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, பழைய வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் நேற்று போராட்டம் நடத்தினர். நீண்ட நேரம் போராட்டம் நீடித்ததால், கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்லவில்லை. அப்போது, காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறையினருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதாக 120 பேர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து, பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இதையடுத்து அங்கு சென்ற சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், இஸ்லாமிய அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், காவல்துறையினரின் அணுகுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமியர்களின் போராட்டம் நள்ளிரவைத் தாண்டியும் நீடித்தது.

அதேபோல் திருவல்லிக்கேணி, பாரிமுனை, கிண்டி, ஆலந்தூர் ஜி.எஸ்.டி சாலை உள்ளிட்ட சென்னையின் பல இடங்களிலும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆங்காங்கே கடுமையானபோக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய முதியவர் ஒருவர் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இதனால் மதுரை, திருச்சி, ராமநாதபுரம், தேனி என தமிழகத்தின் பல இடங்களில் இரவில் போராட்டம் பரவியது. இந்நிலையில் போராட்டத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து ட்வீட் செய்துள்ள சென்னை காவல்துறை, 70 வயது மதிக்கத்தக்க பெரியவர் இயற்கையாக மரணம் அடைந்ததை, வண்ணாரப்பேட்டை CAA போராட்டத்தின்போது இறந்துவிட்டதாக சிலர் தவறுதலாக வேண்டுமென்றே பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள். யாரும் இறக்கவில்லை. எச்சரிக்கை தேவை. இறந்துவிட்டார் என்ற பொய்த் தகவலை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close