பக்கா பிளான்!! நகை திருட்டில் சிக்கிய எம்.பி.ஏ. பட்டதாரி!!

  முத்து   | Last Modified : 15 Feb, 2020 01:55 pm
mba-graduate-arrested-in-a-case-of-robbery

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் 3 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் எம்.பி.ஏ பட்டதாரி சிக்கினார். மார்த்தாண்டத்தில் பொன் விஜய் என்பவரது வீடு மற்றும் அவரது நகைக்கடையில் கடந்த 27ஆம் தேதி 3 கிலோ தங்க நகை மற்றும் 2,00,000 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. அதாவது வீட்டில், மாடி வழியாக உள்ளே இறங்கிய மர்ம நபர், அங்கிருந்த நகைகளை திருடிய பின், பொன் விஜய்க்கு சொந்தமான நகைக்கடையின்  சாவியை எடுத்துச் சென்று கடையில் இருந்த நகைகளையும் திருடி சென்றார்.

இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தக்கலை டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையில் நான்கு தனிப்படை போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக எஸ்.டி மங்காடு பகுதியை சேர்ந்த எம்.பி.ஏ., பட்டதாரி எட்வின் ஜோஸ் என்பவரை போலீசார் கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனர். இவர் கொடுத்த தகவலின் பேரில் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அவரது கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close