லஞ்சம் வாங்கிய அதிகாரி!! கையும் களவுமாக சிக்கினார்!!

  முத்து   | Last Modified : 15 Feb, 2020 02:03 pm
tn-eb-official-arrested-with-bribery

தருமபுரி மாவட்டம் நடப்பனஅள்ளியைச் சேர்ந்தவர் விவசாயி மாது. இவர் தனது பூந்தோட்டத்திற்கு மின் இணைப்பு வழங்க இண்டூரில் உள்ள மின்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். மின் இணைப்பு வழங்க மின்வாரிய அலுவலக உதவிப்பொறியாளர் அகல்யா மற்றும் வணிக ஆய்வாளர் முனுசாமி ஆகிய இருவரும், 11000 ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதில் முதல் தவணையாக 4000 ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்ட நிலையில், மீதி தொகை 7000 ரூபாயை கொடுக்க விரும்பாத விவசாயி மாது, லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார்.

அவர்கள் ஆலோசனைப்படி, ரசயானம் தடவிய ரூபாய் நோட்டுக்களை மின் வாரிய அதிகாரிகள் இருவரிடமும் விவசாயி மாது அளித்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close