உல்லாசமாக இருந்த மனைவி!! கதவை மூடிவிட்டு கணவர் வெறிச்செயல்!!

  முத்து   | Last Modified : 15 Feb, 2020 02:04 pm
husband-who-cut-his-wife-with-sickle

கள்ளக்காதலனுடன் வீட்டில் மனைவி உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த கணவன் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். கெங்கவல்லி அருகே நடுவலூர் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ்34) - பிரியா(27) தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரைக்கும் பிரியாவுக்கு கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஓராண்டாக பிரியாவுடன், சின்னதுரைக்கு தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த கணவர், மனைவியிடம் தட்டிக்கேட்டதால், பிரியா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.

கடந்த, 3ஆம் தேதி தனது மனைவி நடத்தை குறித்து, கெங்கவல்லி போலீசில் புகாரளித்தார். புகார் மீது விசாரித்த போலீசார், சேர்ந்து வாழும்படி இருவருக்கும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று மதியம் தனது மனைவி வீட்டில் இல்லாததால், அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், சின்னதுரை வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு, தனி அறையில் இவரது மனைவியும், சின்னதுரையும் உல்லாசமாக இருந்ததை பார்த்து ஆத்திரமடைந்துள்ளார்.

பின்னர் அவரது வீட்டை வெளிப்புறமாக தாழிட்டு, தனது வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து சின்னதுரை, பிரியாவை சரமாரியாக வெட்டியுள்ளார். படுகாயமடைந்த இருவரும், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கெங்கவல்லி போலீசார், பிரகாஷ் மீது கொலை முயற்சி உள்பட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close