புத்தாண்டு தினத்தில் கோவில்களை திறக்க தடை விதிக்க மறுப்பு

  Anish Anto   | Last Modified : 28 Dec, 2017 02:09 pm

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நள்ளிரவில் கோவில்களை திறக்க தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு.

ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு அன்று நள்ளிரவு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 31-ம் தேதி இரவு 11 மணி அளவில் கோவில் திறக்கப்பட்டு பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இந்த நிலையில் புத்தாண்டு நள்ளிரவில் கோவில்களை திறக்க தடை விதிக்க கோரி வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள மனுவில், "ஆகமவிதிப்படி சைவ கோயில்களில் சிவராத்திரி அன்றும் வைணவ கோயில்களில் வைகுண்ட ஏகாதசி அன்றும் நள்ளிரவில் கோவில்களை திறக்க வேண்டும். ஆகம விதிகளுக்கு மாறாக புத்தாண்டு அன்று நள்ளிரவில் கோவில் திறக்கப்படுகிறது இதற்கு தடை விதிக்க இந்து சமய அறநிலைய துறைக்கு உத்தரவிட வேண்டும்" என தெரிவித்திருந்தார்.

இன்று நடைபெற்ற இந்த மனு மீதான விசாரணையின் போது நீதிமன்றம், கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதால் கோவில்களை திறக்க தடை விதிக்க முடியாது என தெரிவித்தது. மேலும், இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் செயலாளர் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி வழக்கு விசாரணையை ஜனவரி 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close