போக்குவரத்துக்கழக ஊதிய ஒப்பந்த விவகாரம்: தமிழக அரசு 11-ந் தேதிக்குள் ரூ.204 கோடி தர கோர்ட் உத்தரவு

  Sujatha   | Last Modified : 04 Jan, 2018 06:32 am


தமிழக அரசு, போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.204 கோடியை 11-ந் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்துக்கழக ஊழியர்கள், ஓய்வூதிய பலன் உள்ளிட்ட நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தியும், 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக் கோரியும் கடந்த ஆண்டு  மே 14-ம் தேதி காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர். இது சட்டவிரோதம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த போராட்டத்திற்கு தடை விதித்தது.

இதனை தொடர்ந்து, இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய உள்ளிட்ட தொகையில், முதல் தவணையாக ரூ.379 கோடியை 2017-ம் ஆண்டு டிசம்பர் 15-ந் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால், அந்த தொகையை தமிழக அரசு வழங்கவில்லை.   இதையடுத்து முதல் தவணை தொகையில், ரூ.175 கோடியை ஜனவரி 3-ந் தேதிக்குள் (நேற்று) வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். 

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் " ஊழியர்களுக்கு ரூ.175 கோடி வழங்குவது குறித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை கோர்ட்டில் தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து நீதிபதிகள் முதல் தவணை தொகையான ரூ.379 கோடியில், ரூ.175 கோடியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்து விட்டது. மீதத்தொகையான ரூ.204 கோடியை 11-ந் தேதிக்குள் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்." இதனை தொடர்ந்து வழக்கு 17ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close