தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

  கோமதி   | Last Modified : 08 Jan, 2018 01:07 pm


போக்குவரத்து தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்-  உயர் நீதி மன்றம் அதிரடி 

போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி,தொடர்ந்து 5வது நாளாக போராடி வருகின்றனர்.இந்நிலையில் இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது,தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் சரமாரியான கேள்விகளை  தொடுத்துள்ளது. 

தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை முழுமையாக வழங்காதது ஏன்?, தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையை வழங்குவதில் தாமதம் ஏன்?,போக்குவரத்து துறையை திறம்பட நடத்த முடியவில்லை என்றால் அதை கலைத்துவிட்டு தனியார் மயமாக்க வேண்டியது தானே என்று பல கேள்விகளை  எழுப்பியதுடன், போக்குவரத்து தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்கவும் அரசுக்கு உயர்தீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . 

இந்த போராட்டத்தால் யாருக்கு பாதிப்பு என்பதை உணர்ந்தீர்களா என்று தொழிற்சங்கங்களுக்கும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தால் போது மக்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்கள் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close