போக்குவரத்து ஊழியர் போராட்ட தடையை நீக்க மறுப்பு

  Anish Anto   | Last Modified : 08 Jan, 2018 12:40 pm


போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு.

ஊதிய உயர்வு, நிலுவை தொகை வழங்கல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 5 நாட்களாக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து ஊழியர்களையும், தற்காலிக ஓட்டுநர்களையும் கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனலும் தமிழகம் முழுவதும் 60% குறைவான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. இதனால் வேலைக்கு செல்வோர், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில் கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றம் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், பணிக்கு திரும்பாத ஊழியர்களை வேலை நீக்கம் செய்யும் படி உத்தரவிட்டிருந்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவை புறக்கணித்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இன்று மீண்டும் வேலை நிறுத்தம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, அப்போது போராட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், முன்னறிவிப்பு இன்றி நடைபெறும் போராட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என மீண்டும் அறிவுறுத்தினர். மேலும், பணிக்கு திரும்பாத ஊழியர்களுக்கு நோட்டீஸ் அளிக்காமல் வேலை நீக்கம் செய்ய கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close