மணல் குவாரிகள் மீதான தடை தொடரும்: மதுரைக்கிளை

  முத்துமாரி   | Last Modified : 19 Jan, 2018 11:50 am


மணல் குவாரிகளை மூட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக போடப்பட்ட  தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் அனைத்தையும் 6 மாத காலத்திற்குள் மூட வேண்டும் மற்றும் கிரானைட் குவாரிகளை படிப்படியாக மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கடந்த நவம்பர் 29ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.

மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணைக்கு பிறகு, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மணல் குவாரிகளை 6 மாத காலத்திற்குள் மூட வேண்டும், குவாரிகள் மீதான தடை தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close