வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்கத் தடை: சென்னை உயர்நீதிமன்றம்

  முத்துமாரி   | Last Modified : 19 Jan, 2018 03:09 pm


வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று இடைக்காலத்தடை விதித்துள்ளது. 

ஆண்டாள் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், ஆண்டாள் குறித்து தவறாக பேசி மதங்களுக்கு இடையே வைரமுத்து பிரச்சனையை தூண்டியுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் மற்றும் அரசியல் கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. 

வைரமுத்துவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று காலை நீதிபதி ரமேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, "வைரமுத்து தன்னுடைய சொந்த கருத்தை கூறவில்லை. ஆராய்ச்சியாளரின் கருத்தைத்தான் மேற்கோள் காட்டியுள்ளார். இதனால், வைரமுத்து கூறியதில் தவறு ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை"  என்றார்.

இதற்கிடையே தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என வைரமுத்துவும் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் மீதான விசாரணை இன்று பிற்பகல் நடைபெற்றது. அதில் வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்கக்கூடாது என நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்து வழக்கை வருகிற பிப்ரவரி 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close