டிடிவி தினகரனின் சகோதரிக்கு பிடிவாரண்ட்!

  முத்துமாரி   | Last Modified : 19 Jan, 2018 05:00 pm


சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக டிடிவி தினகரனின் சகோதரி மற்றும் அவரது கணவருக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 

கடந்த 1997ம் ஆண்டு டிடிவி தினகரனின் சகோதரி ஸ்ரீதள தேவி மற்றும் அவரது கணவர் பாஸ்கர் ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக 1.68 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 2008ம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதன்படி,  ஸ்ரீதள தேவிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 10 லட்சம் ரூபாய் அபராதமும், அவரது கணவர் பாஸ்கரனுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 20 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 

சிபிஐ  நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஸ்ரீதள தேவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவில், சிபிஐ  நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. 

தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் ஆஜராகததால், தினகரனின் சகோதரி ஸ்ரீதள தேவி மற்றும் அவரது கணவர் பாஸ்கருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close