அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சப்புகார் பலகை!

  முத்துமாரி   | Last Modified : 20 Jan, 2018 08:19 am


அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சப்புகார் குறித்த விபரங்கள் அடங்கிய தகவல் பலகையை வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்கறிஞர் காசிம் என்பவர் மதுரைக்கிளை நீதிமன்றத்தில் ஒரு குற்றசாட்டை முன்வைத்திருந்தார். 'பெரும்பாலான அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் பொது மக்களிடம் இருந்து லஞ்சம் பெறுகின்றனர். அவர்கள் இதுகுறித்து புகார் தெரிவிக்கவேண்டும் என்றால் யாரை அணுக வேண்டும் என்பது குறித்த விபரங்களை தெரியப்படுத்த வேண்டும்' என கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பான வழக்கில் மதுரைக்கிளை நீதிபதி, "அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சப்புகார் குறித்த விபரங்கள் அடங்கிய தகவல் பலகையை வைக்க வேண்டும். மக்கள் பார்வையில் படும்படி அவை வைக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக அனைத்துத்துறை அரசு அலுவலர்களுக்கும் தலைமை செயலாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்' என உத்தரவிட்டுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close