பேருந்து கட்டண உயர்வு: வழக்கை விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு

  முத்துமாரி   | Last Modified : 22 Jan, 2018 10:59 am


தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பேருந்து கட்டண உயர்வு குறித்து முறையிட்டுள்ளார். அவர் கூற்றின்படி, 'தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பாமர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு நாள் பாஸ், மாதம் முழுவதும் பயணம் செய்யக்கூடிய பாஸ் எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் மக்கள் வழக்கத்தை விட இரண்டு மடங்கு பேருந்துக்காக செலவு செய்கிறார்கள். அறிவிப்பு இல்லமால் அரசும் உடனடியாக பேருந்து கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். 

ஆனால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மனுவாக தாக்கல் செய்யும் பட்சத்தில்  வழக்கு விசாரிக்கப்படும் அதுவும் உடனடியாக விசாரிக்க முடியுமா என்பது குறித்து இப்போது கூற இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மனுவாக தாக்கல் செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close