பஸ் கட்டண உயர்வுக்கு எதிரான மனு தள்ளுபடி

  முத்துமாரி   | Last Modified : 24 Jan, 2018 11:48 am


தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான மனுக்களை இன்று சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் இன்று நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், 'அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது' என கூறி அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். 

மேலும் நீதிபதிகள் கூறியதாவது, "போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை ஆகியவற்றை கருத்தில் கொண்டும். புதிய பேருந்துகளை வாங்கும் பொருட்டு தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக கூறியுள்ளது. எனவே அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. பேருந்து கட்டணம் எந்தெந்த பேருந்துகளில் எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறித்து அனைத்து அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளில் கட்டண உயர்வு அட்டவணையை ஒட்ட வேண்டும்" என தெரிவித்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close