ஓய்வூதியம் பெற 37 ஆண்டு போராட்டம்... தியாகிக்கு ஏற்பட்ட அவலம்

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 26 Jan, 2018 08:37 pm

நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போதுதான் சுதந்திர போராட்ட வீரர் ஒருவருக்கு ஓய்வூதியம் கிடைத்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி சேர்ந்தவர் காந்தி. சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்ற இவர், தியாகிகள் பென்‌ஷனை பெற கடுமையாக போராடியுள்ளார். இவர், தன்னுடைய 16வது வயதில், நேதாஜி படையில் சேர்ந்தார். 1942-ல் ஆங்கிலேயே அரசுக்கு எதிரான போரில் இவர் பங்கேற்றார். போரின்போது சிறைபிடிக்கப்பட்ட இவர், பர்மா சிறையில் அடைக்கப்பட்டார். சுதந்திரத்துக்குப் பிறகு பர்மாவில் வசித்து வந்த இவர், 1964ம் ஆண்டு பர்மா அகதியாக தமிழகம் வந்தார்.

1980ம் ஆண்டு முதல் இவர் சுதந்திர போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியத்தை பெற முயற்சி மேற்கொண்டு வந்தார். ஆனால், வயது வித்தியாசத்தை காரணம் காட்டி தியாகியாக ஏற்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

தொடர்ந்து உரிமைகள் மறுக்கப்பட்டு வரவே அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு, "தான் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றதற்கான போதுமான ஆதாரங்களை காந்தி தாக்கல் செய்துள்ளார். இவருக்கு நேதாஜி படையின் கேப்டனாக இருந்த லட்சுமி காந்தி அளித்த சான்றிதழ்களையும் அதிகாரிகள் ஏற்க மறுத்துள்ளனர். தன்னுடன் சிறையில் இருந்த, தற்போது ஓய்வூதியம் பெற்றுவரும் இதர தியாகிகள் பட்டியலையும் ஆதாரத்தையும் காந்தி தாக்கல் செய்திருக்கிறார். 

அனைத்தையும் ஏற்க மறுத்துவிட்டு, வயது வித்தியாசத்தை காரணம் காட்டி அவருக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை அளிக்க மறுத்துள்ளனர். இது துரதிர்ஷ்டவசமானது. அதிகாரிகள் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்திருப்பது இதன் மூலம் தெரியவருகிறது. இரண்டு வாரத்துக்குள் அவருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். 1980 ஜூலை மாதம் அவர் முதன்முறையாக விண்ணப்பித்திருக்கிறார். அந்த தேதியில் இருந்து கணக்கிட்டு நான்கு வாரங்களுக்குள் அதை செட்டில் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

அதிகாரிகள் இனியும் காலம் தாழ்த்தாமல், மேல் முறையீடு செய்யாமல், தியாகிக்கு உரிய ஓய்வூதியத்தை அளித்து அவருக்கு உதவ வேண்டும் என்பதுதான் அனைவரும் எண்ணமுமாக இருக்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close