அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு இடைக்காலத்தடை: மதுரைக்கிளை

  முத்துமாரி   | Last Modified : 29 Jan, 2018 04:53 pm


அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத்தடை விதித்துள்ளது. 

அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பான வழக்கு ஒன்று இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் கூறுகையில் "தமிழகத்தில் நீதிமன்றங்களில் தகுதி, திறமையை பார்க்கமால் ஆளும் கட்சி அல்லது ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு பதவி அளிக்கப்படுகிறது. இதனால் வழக்குகளில் அரசுக்கு சாதகமாக வாதம் முன்வைக்கப்படுகிறது. இது நீதித்துறைக்கு ஏற்றது அல்ல. எனவே தற்போது நியமிக்கப்போகும் அரசு குற்றவியல் வழக்கறிஞர்களை அதுபோன்று நியமிக்காமல் தகுதி, திறமை அடிப்படையில் நியமிக்க வேண்டும்" என கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இதனை விசாரித்த நீதிபதி, "இதுவரை அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்யப்பட்டவர்கள் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்துள்ளனர்? எத்தனை வழக்குகளில் அவர்கள் வாதாடியுள்ளனர்? மேலும் என்ன அடிப்படையில் அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது? என்ற விபரங்களை உயர்நீதிமன்ற பதிவாளர் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் சட்டத்துறை செயலரும் இது தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்" என கூறியுள்ளார். மேலும் வழக்கு பிப்ரவரி 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close