கொள்ளையன் நாதுராமுக்கு 10 நாள் போலீஸ் காவல்!

  முத்துமாரி   | Last Modified : 31 Jan, 2018 07:35 am


கொள்ளையன் நாதுராம் மற்றும் அவனது கூட்டாளிகள் இரண்டு பேரை 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சென்னை கொளத்தூர் லட்சுமிபுரம் நகைக்கடை ஒன்றில், கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி 3 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறை, அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்ததில் ராஜஸ்தானைச் சேர்ந்த நாதுராம் மற்றும் அவனது கூட்டாளிகள் நகைகளை திருடியுள்ளது தெரிய வந்தது. தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் தமிழக போலீசார் அவனை தீவிரமாக தேடி வந்தனர்.

தமிழக தனிப்படை போலீசார் நாதுராமை பிடிக்க ராஜஸ்தான் சென்றபோது காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்கிடையே நாதுராமை தேடிவந்த ராஜஸ்தான் போலீஸ், குஜராத்தில் அவனை கைது செய்தனர். பின்னர் நாதுராம் ராஜஸ்தான் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். இதனையடுத்து ராஜஸ்தான் போலீசார் கொள்ளையன் நாதுராமை கடந்த 25ம் தேதி தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சென்னைக்கு கொண்டு வரப்பட்ட நாதுராம் இன்று எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். மேலும், நாதுராமின் கூட்டாளிகள் தினேஷ் மற்றும் பக்தாராம் ஆகியோரும் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி முன்பு நடந்த விசாரணையில், குற்றவாளிகளை 10 நாளில் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி தரவேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணைக்கு பிறகு, நாதுராம், தினேஷ், பக்தாராம் ஆகிய 3 பேரையும் 10 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கிடையே நாதுராம் மற்றும் அவனது கூட்டாளிகள் தங்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். பிப்ரவரி 2ம் தேதி இந்த மனுக்கள் விசாரணைக்கு வருகின்றன. மேலும் இந்த கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட நாதுராமின் தந்தை உள்பட 4 பேரை நீதிமன்றம் இன்று ஜாமீனில் விடுத்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close