மணல் குவாரிகளை மூடுவதற்கு இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்

  முத்துமாரி   | Last Modified : 05 Feb, 2018 07:20 pm


தமிழகத்தில் மணல் குவாரிகளை மூடுவதற்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் அனைத்தையும் 6 மாத காலத்திற்குள் மூடவேண்டும் எனவும் கிரானைட் குவாரிகளை படிப்படியாக மூட வேண்டும் எனவும் கடந்த நவம்பர் மாதம் 29ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை  உத்தரவிட்டது. மலேசிய மணல் இறக்குமதி தொடர்பான வழக்கின் தீர்ப்பின் போது நீதிபதி மகாதேவன் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த மனுவையும் மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், "தமிழகத்தில் மணல் குவாரிகள் அனைத்தும் மூடப்பட்டால் பெரும்பாலான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் மற்றும் கட்டுமானப் பணிகள் எதுவும் நடைபெறாது. இதனால் தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே மணல் குவாரிகளை மூட தடை விதிக்க வேண்டும்" என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இன்றைய விசாரணைக்கு பிறகு, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், தமிழகத்தில் மணல் குவாரிகளை மூடுவதற்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கின் விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்தி வைத்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close